Sunday, December 18, 2011

என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்!
அன்று தான் உன்னை 
நான் நேரில் சந்தித்த நாள்!
உன்னை நான் சந்தித்த 
அந்த நொடி இன்னும்
என் கண்முன்னே நிற்கிறது!
எனக்குள் காதல் என்ற
அனுபவத்தை முதன் முதலில்
கொடுத்த உன்னை நேரில் காண
நான் ஏங்கி தவமிருந்த அந்த
நொடிப்பொழுதை நான் சந்தித்தேன்!
உன்னை கண்டதும் என் மனதில்
வசந்தம் வீசுவதை உணர்ந்தேன்!
நாம் எத்தனை பகல் எத்தனை
இரவுகள் மணிகணக்காய் பேசி
நம் உணர்வுகளை பரிமாறிக்கொண்டு
காதலராய் வாழ்ந்து கொண்டு இருந்தாலும்
உன்னை நேரில் கண்டதும் என்னால்
உன் விழியை நேருக்கு நேர்
சந்திக்க முடியாமல் திணறினேன்!.
அன்று தான் என் வாழ்வில்
நான் இதுவரை அடைந்திராத
எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் !
அந்த மகிழ்ச்சி எப்படி இருந்தது என்றால்
பாலைவனத்தில் கோடிகணக்கான
மலர்கள் பூத்து குலுங்கியது போலிருந்தது !
உன்னுடைய அன்பு
என் இறுதி மூச்சு வரை
தொடர வேண்டுமென்று
உன்னிடம் நான் கையேந்தி நிற்கிறேன்
தருவாயா உன் அன்பை காதலை பாசத்தை!
மின்னும் இயற்கையெல்லாம் 
உன்னழகைக் காட்டுதடி 
எண்ணமெனும் தேன்கூட்டில் 
இன்பக் கனல் மூட்டுதடி
வான நிலாப்பெண்ணை 
வட்டமிட்டு மேகமொன்று 
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி
துள்ளிவிளும் நீரலையில்
வெள்ளிமலர் பூத்ததடி
வள்ளியுனை எதிர்பார்த்த
மெல்லுடலும் வேர்த்ததடி
இல்லத்தில் நீயிருந்தால்
இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ் உனது
சொல்லில் வந்து கொஞ்சுதடி......
பிரம்மன் கனவில் கண்டான் உன்னை அன்று
நான் உன்னை நேரில் கண்டேன் இன்று
உன்னை கண்ட நொடிமுதல்
என் இமைகள் இமைக்க மறந்துவிட்டன
நீ பிரம்மனின் பிரம்மாண்ட படைப்பா ?
அல்லது மோனாலிசாவுக்கு மோடலாக பிறந்தவளா ?
உன்னை சிற்பி செதுக்காத சிலை என்பதா ?
ஓவியன் வரையாத ஓவியம் என்பதா ?
கவிஞன் எழுதாத கவிதை என்பதா ?
ஒன்றுமே புரியவில்லை என் இளமைக்கு ?
உன் உதட்டில் உள்ள தடங்கள்
எந்த மொழி கொண்ட எழுத்துக்கள்
அதை வாசித்து பயில்வதற்கு
வரம் ஒன்று கொடுப்பாயா எனக்கு ?